மேலும் செய்திகள்
ஏல விற்பனையில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
04-Mar-2025
அன்னுார்; அன்னுாரில், ஏல விற்பனையில் ஒரு கிலோ தேங்காய்க்கு, 60 ரூபாய் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒவ்வொரு வாரமும் புதனன்று வேளாண் விளை பொருட்கள் ஏல விற்பனை நடைபெறுகிறது. நேற்று நடந்த ஏலத்தில், 444 கிலோ தேங்காய்களை ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.ஏலத்தில் குறைந்தபட்சமாக ஒரு கிலோ தேங்காய், 48 ரூபாய் 10 காசு முதல் அதிகபட்சமாக 60 ரூபாய் 20 காசு வரை விலை போனது. உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் தேங்காய் கொள்முதல் செய்தனர்.தேங்காய் பருப்பு குறைந்தது, 90 ரூபாய் முதல் அதிகபட்சம் 150 ரூபாய் 20 காசு வரை விற்பனையானது.இத்தகவலை, கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் தெரிவித்தார்.
04-Mar-2025