மேலும் செய்திகள்
கே.ஜி.எம். மருத்துவமனை வெள்ளி விழா கொண்டாட்டம்
21-Aug-2024
கோவை : புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில், புதிய மருத்துவமுறையான 'சி.ஏ.ஆர்.டி., தெரபி' சிகிச்சை முறையை அறிமுகம் செய்து கே.எம்.சி.ஹெச்.,புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சி.ஏ.ஆர்.டி., சிகிச்சையை, 3 முறை செய்து தமிழகத்திலேயே அதிக முறை செய்த மருத்துவமனையாக பெயர் பெற்றுள்ளது.சி.ஏ.ஆர்.டி., என்ற புதிய வகை இம்யூனோ தெரபியானது ரத்தப் புற்றுநோய், நிணநீர்ச் சுரப்பி புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோய் செல்களை அழிப்பதோடு, பல ஆண்டுகளாக அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, தமிழ்நாட்டில் அதிக அளவிலான சி.ஏ.ஆர்.டி., தெரபி செய்து சாதனை புரிந்த புற்றுநோய் நிபுணர்களுக்கு தனது பாராட்டு, வாழ்த்துகளை தெரிவித்தார்.கே.எம்.சி.ஹெச்., செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், “இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இப்புதிய சிகிச்சை முறை, 3 நோயாளிகளுக்கு பலனளித்துள்ளது.அதன் வாயிலாக கே.எம்.சி.ஹெச்., புற்றுநோய் மருத்துவத்தில் தமிழ்நாட்டில் தலைசிறந்து விளங்குகிறது. ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிக்கு இது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்,” என்றார்.
21-Aug-2024