உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முருகன் கோவில்களில் இன்று கிருத்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் இன்று கிருத்திகை வழிபாடு

அன்னுார்; அன்னுார் மற்றும் கோவில்பாளையத்தில் இன்று கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. பழமையான, சித்தர்கள் வழிபட்ட, சாலையூர், பழனியாண்டவர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு, இன்று மாலை 6:00 மணிக்கு, பழனியாண்டவருக்கு, அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, துடியலூர், லட்சுமண சுப்ரமணி குழுவின் பஜனை நடக்கிறது. * அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில், இன்று மாலை அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதரராக, கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார்.* குன்னத்தூர், பழனியாண்டவர் கோவில், எல்லப்பாளையம் பழனியாண்டவர் கோவில் மற்றும் கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் இன்று கிருத்திகை வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ