உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணபதி கோவில் கும்பாபிேஷகம்

கணபதி கோவில் கும்பாபிேஷகம்

உடுமலை;கொழுமம், அக்ராஹாரம், வலம்புரி அஷ்ட சித்தி மகா கணபதி கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.மடத்துக்குளம் தாலுகா, கொழுமம் அக்ராஹாரத்தில், நுாற்றாண்டு பழமையான வலம்புரி அஷ்ட சித்தி ஸ்ரீ மகா கணபதி கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷக விழா, 22ம் தேதி, கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது.கடந்த, 23ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, வேத மந்திரங்கள் முழங்க, மூலவர் கோபுர கலசங்களுக்கும், மகா கணபதிக்கும் மகா அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடந்தது. கொழுமம், வரதராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை