உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரட்டுமேடு குமரக்கடவுள் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கரட்டுமேடு குமரக்கடவுள் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கோவில்பாளையம்: பழமையான கரட்டுமேடு குமரக் கடவுள் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது.கோவை -- சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குரும்பபாளையம் அருகே கரட்டுமேடு கோவில் என்று அழைக்கப்படும், ரத்தினகிரி குமரக்கடவுள் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 6ம் தேதி அதிகாலையில் திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது.நேற்று முன்தினம் காலை, ரத்தினகிரி சித்தர் பாலமுருகன் அடிமை சாமிகள் தலைமையில், இரண்டாம் கால கேள்வியும், மாலையில் மூன்றாம் கால வேள்வியும் நடந்தது.நேற்று சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள் முன்னிலையில், விமான கலசங்கள் நிறுவப்பட்டன. நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று (9ம் தேதி) காலை 7:00 மணிக்கு, உற்சவர்கள் மற்றும் திருச்சுற்று மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை 7:45 மணிக்கு விமானத்திற்கும், 8:15 மணிக்கு குமர கடவுளுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.மடாதிபதிகள் அருளுரை வழங்குகின்றனர். மதியம் மகா அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ