உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அங்காள பரமேஸ்வரி கோவிலில் குண்டம் விழா

அங்காள பரமேஸ்வரி கோவிலில் குண்டம் விழா

அன்னுார்; அன்னுார், அங்காள பரமேஸ்வரி கோவில் குண்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் இறங்கி வழிபாடு செய்தனர்.அன்னுார், தென்னம்பாளையம் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி குண்டம் திருவிழா கடந்த 24ம் தேதி துவங்கியது. காலை அபிஷேக பூஜையும், தீபாராதனையும், மயான பூஜையும் நடந்தது.நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. கோவை திருப்பூர் அன்னுார் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குண்டத்தில் இறங்கி, அம்மனை வழிபட்டனர். இதையடுத்து, ஜமாப் இசையுடன், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை