திரவுபதி அம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா துவக்கம்
ஆனைமலை, ; ஆனைமலையில் உள்ள, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் தேர்த்திருவிழா நாளை (26ம் தேதி) துவங்குகிறது.ஆனைமலை, தர்மராஜா திரவுபதிஅம்மன் கோவிலில் குண்டம் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, நாளை மகா சிவராத்திரி பூஜையுடன் துவங்குகிறது.வரும், 27ம் தேதி கொடி கட்டுதல் நிகழ்ச்சியும்; மார்ச் 5ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. மார்ச் 11ம் தேதி கண்ணபிரான் துாது, சுவாமி புறப்பாடு, குண்டத்துக்காட்டில் விஸ்வரூப தரிசனம்; 14ம் தேதி அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம், அரவான் சிரசு, ஊர்வலம் நடக்கிறது.மார்ச், 15ம் தேதி குண்டம் கட்டுதல், அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.16ம் தேதி முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. 17ம் தேதி திருத்தேர் நிலை நிறுத்தல்; ஊஞ்சல் பட்டாபிேஷகம் நடக்கிறது.18ம் தேதி மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு நிகழ்ச்சி நடக்கிறது.விழாவை முன்னிட்டு, நாளை (26ம் தேதி)முதல், மார்ச், 18ம் தேதி வரை தினமும் காலை, 10:30 மணி, இரவு, 7:00 மணிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. தினமும் இரவு, 7:30 மணிக்கு மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் செந்தில்வேல், ஆய்வாளர் சித்ரா ஆகியோர் செய்து வருகின்றனர்.