உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்திய தத்துவ மரபில் உள்ள தலைமைத்துவம் அளப்பரியது

இந்திய தத்துவ மரபில் உள்ள தலைமைத்துவம் அளப்பரியது

கோவை; ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆய்வு அறக்கட்டளை (எஸ்.பி.எம்.ஆர்.எப்.,) சார்பில், மத்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் பாலசுப்ரமணியம் எழுதிய, 'பவர் வித்தின் தி லீடர்ஷிப் லெகஸி ஆப் நரேந்திர மோடி' புத்தக அறிமுக விழா, கோவை, ராமநாதபுரம், ஆர்ய வைத்திய பார்மஸி வளாகத்தில் நடந்தது.எஸ்.பி.எம்.ஆர்.எப்., செயலாளர் கனகசபாபதி தலைமை வகித்துப் பேசுகையில், “அர்ப்பணிப்புடன், புரிந்து கொண்டு, தொலைநோக்குடன் செயல்படும் தலைவர்கள் வெகு சிலரே. அப்படிப்பட்ட தலைவர்தான் இன்று நாட்டையும் வழிநடத்துகிறார்,” என்றார்.நூலாசிரியர் பாலசுப்ரமணியம் பேசியதாவது:தலைமைத்துவத்தை மேற்கத்திய நாடுகள் கற்பித்தன என நம்புகிறோம். இந்திய தத்துவ மரபில் உள்ள தலைமைத்துவம் அளப்பரியது. பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்து சொன்ன 10 அறிவுரைகள், வான்மீகி ராமாயணத்தில், ராமர், பரதனுக்கு நாட்டை வழிநடத்துவது குறித்து வழங்கிய 17 ஸ்லோகங்கள் போன்றவற்றில், எவ்வளவு அருமையான கருத்துகள் உள்ளன.இப்புத்தகத்தை எழுத அனுமதி கேட்டபோது, பிரதமர் மோடி சில நிபந்தனைகளை விதித்தார். 'மோடியின் பக்தராக இப்புத்தகம் எழுதப்படக்கூடாது. புராதன இந்திய தத்துவங்கள், இந்து ஞானமரபு, புத்தம், சமணம் வழியான இந்திய தலைமைத்துவத்தை விளக்குவதாக இருக்க வேண்டும். யோகா, ஆயுர்வேதம் போன்றவை மட்டுமே இந்தியா அல்ல.அதன் தலைமைத்துவ பண்பு உட்பட, ஏராளமான பொக்கிஷங்கள் இருப்பதை புத்தகம் வெளிப்படுத்த வேண்டும். புத்தகத்தைப் படித்து ஏராளமான தலைவர்கள் உருவாக வேண்டும்' என்றார். அந்த நோக்கத்தில்தான் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.புத்தகத்தை, ஆர்ய வைத்திய பார்மஸி (ஏ.வி.பி.,) இயக்குநர் தேவிதாஸ் வாரியர், கனகசபாபதி வெளியிட, கீதா ஸ்ரீதரன், என்.டி.பி.சி., இயக்குநர் சங்கீதா வாரியர், வராண்டா கிளப் நிறுவனர் ஜெகன்னாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.அமேசான், கிண்டில் தளங்களிலும் இப்புத்தகம் கிடைக்கும். இப்புத்தக விற்பனையில் கிடைக்கும் தொகை, பி.எம்.,கேர் நிதிக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி