உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது

டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே, மது விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாராம், 33, கூலி தொழிலாளி. இவர் கோவில்பாளையம், காளியண்ணன்புதூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற போலீசார் அங்கிருந்த ராஜாராமை விசாரித்த போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது உறுதியானது. தொடர்ந்து, அவரிடம் இருந்து, 32 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்தனர். இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை