உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி மற்றும் வருவாய் துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, லாரியின் வாகன ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். இதனிடையே லாரியில் 3 யூனிட் கிராவல் மண் இருந்தது. அது உரிய அனுமதி இன்றி கள்ளத்தனமாக ஏற்றி வந்தது என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து லாரியை கிராவல் மண்ணுடன் கைப்பற்றி, அதிகாரிகள் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி