மேலும் செய்திகள்
அய்யன்பேட்டை குளம் சீரமைக்க வலியுறுத்தல்
03-Feb-2025
கோவை; கோவை ஹரிஹர புத்திரன் ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கோவை, குறிச்சி குளம் எதிரில் ஹரிஹர புத்திரன் ஸ்ரீ அய்யனார் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கோவிலின் நிறுவனர் ஓம் ஸ்ரீ மாரியப்ப சுவாமிகள் கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், மகா சிவராத்திரி அன்று ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலில் ஸ்ரீ அய்யனார் சுவாமியுடன் ஜீவ ஐக்கியம் அடைந்தார். அவர் நினைவாக, 25ம் ஆண்டு குருபூஜை விழா மற்றும், 40 ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நடந்தது.விழாவில், ஸ்ரீ அய்யனார் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரி ஹர ஸ்ரீ ஸ்ரீனிவாச சுவாமிகள், 108 சங்காபிஷேகம் மற்றும் மஹா ருத்ர பாராயணம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்தார்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
03-Feb-2025