மேலும் செய்திகள்
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்
22-Feb-2025
மேட்டுப்பாளையம்,; மேட்டுப்பாளையத்தில், தடை செய்யப்பட்ட 41 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள தனியார் ஏஜென்சி கடையின் குடோனில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்யப்படுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் தலைமையிலான போலீசார், அங்கு சென்று சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட 41 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த மேட்டுப்பாளையம் எஸ்.எம். நகரை சேர்ந்த பைசூர் ரகுமான், 48, என்பவரை கைது செய்தனர்.----
22-Feb-2025