உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி அதிகாரிகளுக்கு மெமோ

மாநகராட்சி அதிகாரிகளுக்கு மெமோ

கோவை; கோவை காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில் நேற்று தமிழக பட்ஜெட் உரை ஒளிபரப்புவதற்காக பெரிய திரை அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு திடீரென்று ஒளிபரப்பானது. இதை அங்கிருந்தவர்கள் பார்த்து கைதட்டி ரசித்தனர். சிறிது நேரத்துக்கு பின்பு சீமான் பேச்சு நிறுத்தப்பட்டு, பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு ஒளிபரப்பானது. இது பெரும் சர்ச்சை ஆனது.பட்ஜெட் ஒளிபரப்பிற்கு முன் சீமான் பேச்சை நிறுத்த முயற்சிக்காமல் எவ்வித எதிர் வினையும் ஆற்றாமல் இருந்த மாநகராட்சி மேற்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, உதவிப்பொறியாளர் குமரேசன், மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலாஜி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு 'மெமோ ' வழங்கினார் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன். இது குறித்து உதவிகமிஷனர் செந்தில்குமாரிடமும் விளக்கம் கேட்டறிந்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை