உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒளிபரப்பும்போது தேதி, நேரத்தை குறிப்பிடுங்கள்: டிவி சேனல்களுக்கு உத்தரவு

ஒளிபரப்பும்போது தேதி, நேரத்தை குறிப்பிடுங்கள்: டிவி சேனல்களுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : இயற்கை பேரழிவு, பெரிய விபத்து போன்ற சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடும் போது, பார்வையாளர்கள் பீதி அடையாமல் இருக்க, அது தொடர்பான காட்சிகளில், தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடும்படி, தனியார் செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, தனியார் செய்தி சேனல் நிறுவனங்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இயற்கை பேரிடர், ரயில் விபத்து போன்ற பெரிய சம்பவங்கள் குறித்து, செய்தி சேனல்கள் தொடர்ந்து செய்தி வெளியிடுகின்றன. ஆனால், அந்த சம்பவம் எப்போது நடந்தது என்பதை குறிப்பிட சேனல்கள் மறந்து விடுகின்றன.விபத்து நடந்து பல நாட்களுக்கு பின், செய்தி சேனல்களில் அது தொடர்பான காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால், இதை பார்க்கும் பார்வையாளர்கள், விபத்து தற்போது நடந்ததா அல்லது பழைய சம்பவமா என தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். மேலும் சிலர் பீதி அடைகின்றனர்.எனவே, பார்வையாளர்களிடையே தவறான புரிதலை தவிர்க்க, இயற்கை பேரழிவு, பெரிய விபத்துகள் போன்ற சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடும் போது, அது தொடர்பான காட்சிகளில், தேதி மற்றும் நேரத்தை, அனைத்து தனியார் செய்தி சேனல்களும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.இதனால், சம்பவம் எப்போது நடந்தது என்பதை பார்வையாளர்கள் எளிதில் புரிந்து கொள்வர். இந்த உத்தரவை அனைத்து தனியார் செய்தி சேனல் நிறுவனங்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

VENKATASUBRAMANIAN
ஆக 13, 2024 07:47

இதுபோன்று நிறைய கட்டுப்பாடு தேவை. செய்தியை உறுதி செய்யாமல் வெளியிட கூடாது.


GMM
ஆக 13, 2024 07:11

மிக முக்கிய உத்தரவு. மக்களிடம் பீதி கிளப்பும் காட்சிகள் பல முறை திரும்ப ஒளிபரப்பு. Live ஒளி பரப்பு கலரில் மறு நாளைக்கு பின் ஒளிபரப்பு கறுப்பு வெள்ளை நிறத்தில், தேதி, நேரம், pincode இடம் பெற்று இருக்க வேண்டும். மீறும் போது நிமிட அபராதம் விதிக்க வேண்டும். 3 முறைக்கு மேல் மூடிவிட வேண்டும்.


Sundar
ஆக 13, 2024 06:52

இது மாதிரி சில கட்டுப்பாடுகள் தேவைதான்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி