உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐந்து நாட்களுக்கு மிதமான மழை

ஐந்து நாட்களுக்கு மிதமான மழை

கோவை:கோவையில் வரும் ஐந்து நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மிதமான மழை எதிர்பார்க்கப்படுவதாக, வேளாண் பல்கலை கணித்துள்ளது. அதன்படி, இன்று 8 மி.மீ., நாளை 26 மி.மீ., 3ம் தேதி 24 மி.மீ., 4ம் தேதி 5 மி.மீ., 5ம் தேதி 4 மி.மீ., மழை பதிவாக வாய்ப்புள்ளது.அதிகபட்ச வெப்பநிலை, 30-34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 21-25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேரம் 50 சதவீதமாகவும் இருக்கும். நிலவும் வானிலையை பயன்படுத்தி ஒத்திவைக்கப்பட்ட நீர்பாசனம், விதைப்பு, உரமிடல் மற்றும் மருந்து தெளிப்பு பணிகளை தொடர, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மழை எதிர்பார்க்கப்படுவதால், நெல்லில் நாற்றங்காலில் நீர் தேங்காமல் இருக்க, முறையான வடிகால் வசதியை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ