| ADDED : ஏப் 12, 2024 10:40 PM
கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பத்திரிகையாளர்களை கண்டாலே ஓட்டமெடுத்து வருகிறார் என்று சொந்த கட்சியினரே புகார் கூறி வருகின்றனர். கணபதி ராஜ்குமார், கோவை தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டசபை தொகுதியில், பிரசாரத்துக்காக பலமுறை வந்து சென்று விட்டார். அவருடன் வரும், அமைச்சர்கள், தி.மு.க., நிர்வாகிகள்தான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கின்றனர். ஆனால், ஒருமுறை கூட, வேட்பாளர் என்ற முறையில் கணபதி ராஜ்குமார் பேட்டி அளிக்கவில்லை. தேர்தல் பிரசாரம் மற்றும் ஓட்டு சேகரிப்பின்போதும் மக்களிடம் இவர் நெருக்கமாக இறங்கி பேசுவதில்லை என்று குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்துள்ளது. இதுபோன்ற சூழலில், பத்திரிகை பேட்டியில் ஏதாவது உளறி விட்டால் என்ன செய்வது என, தி.மு.க.,வில் ஒரு சில நிர்வாகிகள் இவரை பேட்டி அளிக்க விடாமல், தவிர்ப்பதாகவும் பேச்சு எழுகிறது. பல்லடத்தில் பிரசாரம் மேற்கொண்ட வேட்பாளரிடம், பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். 'பிரசாரத்தை முழுமையாக முடித்துவிட்டு கடைசியாக பேட்டி தருகிறேன்,' என்றார். ஆனால், பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் பிரசாரம் முடிந்த கையோடு 'எஸ்கேப்' ஆனார்.