நாட்டு நலப்பணி திட்ட முகாம்
பொள்ளாச்சி,; பூசாரிபட்டியில் உள்ள, பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், நாட்டு நலப்பணி திட்ட முகாம், ஆவலப்பட்டி கிராமத்தில் ஏழு நாட்கள் நடந்தது. அவ்வகையில் மாணவர்கள், சுத்தம் செய்தல், மழைநீர் சேகரிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலவச மருத்துவ முகாம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டனர். முகாம் நிறைவு நாளில், கல்வி நிறுவனத் தலைவர் ரத்தினம், செயலாளர் அருள்மொழி, தாளாளர் சிவானிகிருத்திகா, முதல்வர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். இதற்கான ஏற்பாடுகளை, நாட்டு நல பணித் திட்ட அலுவலர் குணப்பிரியன் செய்திருந்தார்.