உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

புதிய இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் மற்றும் பேரூர் போலீஸ் ஸ்டேஷனில், புதிய இன்ஸ்பெக்டர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் வடிவேல்குமார். இவர், கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய, சண்முகவேல் தொண்டாமுத்தூருக்கு நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் புதிய இன்ஸ்பெக்டராக சண்முகவேல் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அதேபோல, பேரூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த முருகன், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், பொள்ளாச்சி கிழக்கில் இருந்த ரத்தினகுமார், பேரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் நியமிக்கப்பட்டனர்.பேரூர் போலீஸ் ஸ்டேஷன் புதிய இன்ஸ்பெக்டராக, ரத்தினகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை