உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கரா கல்லுாரியில் நயா தேசிய கலாசார விழா

சங்கரா கல்லுாரியில் நயா தேசிய கலாசார விழா

கோவை; சரவணம்பட்டி சங்கரா அறிவியல் வணிக கல்லுாரியில், தேசிய அளவிலான தென்னிந்திய கலாசார விழாவான 'நயா' எனும் திறன் கண்டறியும் விழா, நேற்று நடந்தது.தென்மாநில அளவில் 40க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பங்கேற்றன. 3,500 மாணவ, மாணவியர் தங்கள் திறனை வெளிப்படுத்தினர். மேடை நிகழ்வுகள், மேடை அல்லாத நிகழ்வுகள் என இரு பிரிவுகளில், போட்டிகள் நடந்தன. மேடை நிகழ்வுகளில், ஆடல், பாடல், நடன நிகழ்வுகள், குறு நாடகங்கள், 60 நொடிகளில், கருத்தரங்குகள், சிலம்பாட்டம், கிரிக்கெட் போட்டி பேரம் போன்ற நிகழ்வுகள் நடந்தன.மேடை அல்லாத நிகழ்வுகளாக, நெருப்பில்லாமல் உணவு சமைத்தல், ஓவியம் வரைதல், புதையல் வேட்டை, மெகந்தி, கோலம் போடுதல், டிஜிட்டல் விளம்பரம் உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை