என்.ஜி.பி.,செயலாளருக்கு ஐ.சி.டி., அகாடமி விருது
கோவை;கே.எம்.சி.எச்., மருத்துவமனை துணைத்தலைவர் மற்றும் என்.ஜி.பி., கல்விநிறுவனங்களின் செயலாளர் டாக்டர் தவமணி தேவி , ஐ.சி.டி., அகாடமி சார்பில், 'எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது-2024' வழங்கி கவுரவிக்கப்பட்டார்.கடந்த ஆக., 20ம் தேதி கோவை லீ மெரிடீயனில் நடந்த, 'பிரிட்ஜ் 24' என்ற நிகழ்வில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விருதை வழங்கினார். முப்பதாண்டுகளுக்கு மேலாக கல்வி , மருத்துவம், ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் சிறப்பாக பங்காற்றியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவரின் ஆளுமையின் கீழ், 10 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 15,000 மாணவர்கள் படிக்கின்றனர். டாக்டர் தவமணி தேவி பழனிசாமி கூறுகையில், ''இத்தகைய விருதுகள் கல்வித்தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்யவும், துாண்டுகோலாக அமையும்,'' என்றார்.