உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிக வசதி கொண்ட ரயில் பெட்டிகள் நீலகிரி எக்ஸ்பிரஸ் புதுப்பொலிவு

அதிக வசதி கொண்ட ரயில் பெட்டிகள் நீலகிரி எக்ஸ்பிரஸ் புதுப்பொலிவு

மேட்டுப்பாளையம்; அதிக வசதிகள் கொண்ட எல்.எச்.பி., ரயில் பெட்டிகளுடன், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை மேட்டுப்பாளையம் வந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன் அமைத்து, 150 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. நீலகிரி, கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஐ.சி.எப்., பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த பெட்டிகளை மாற்றி விட்டு, புதிதாக உற்பத்தி செய்த, எல்.எச்.பி., பெட்டிகளை, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைத்து, இயக்க அறிவித்தது. கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்தும், 4ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்தும், புதிய பெட்டிகள் இணைத்த ரயில் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சென்னையிலிருந்து புதிதாக எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை மேட்டுப்பாளையம் வந்தது. இதில் ஏ.சி., பெட்டிகளில் ஒவ்வொரு படுக்கைக்கு இடையே, பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, ஸ்கிரீன் தொங்க விடப்பட்டுள்ளது. படுக்கை சீட்டுகள் பெரிதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. புதிய ரயில் பெட்டிகளில் சீட்டுகள் தரமான முறையில் இருந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை