மேலும் செய்திகள்
கொண்டை ஊசிவளைவுகளில் ரோடு அகலப்படுத்தும் பணி
07-Feb-2025
வால்பாறை; வால்பாறை மலைப்பாதையில் தடுப்புச்சுவர் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.வால்பாறை மலைப்பாதையில் உள்ள ரோடுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கப்படுகிறது. கொண்டைஊசி வளைவுகளில் விபத்து ஏற்படாமல் இருக்க, ஆழியாறு முதல் வால்பாறை வரை, கொண்டை ஊசி வளைவுகளில் குவிக்கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில், பல்வேறு இடங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க, தடுப்புச்சுவர்கள் அதிகளவில் கட்டப்பட்டுள்ளன. மேலும், வால்பாறை மலைப்பாதையில் விபத்து ஏற்படாமல் தடுக்க, ஆபத்தான வளைவுகளில் 'ரோலர் கிராஸ் பேரியர்' தடுப்பு அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.இந்நிலையில், வால்பாறை நகரிலிருந்து சோலையாறு செல்லும் ரோட்டில், நகராட்சி சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆபத்தான வளைவுகளில் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை.இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆழியாறிலிருந்து வால்பாறை வரையில் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் அமைக்கப்பட்ட 'ரோலர் கிராஸ் பேரியர்' போன்று, வால்பாறை - நல்லகாத்து ரோட்டிலும் நகராட்சி சார்பில் அமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
07-Feb-2025