மேலும் செய்திகள்
மனை பட்டா கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
20-Aug-2024
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்களிடமிருந்து வந்த, 300 மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா அறிவுறுத்தினார்.முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுக்களை மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.இலவச வீடு கேட்டு, 53 மனுக்களும், வீட்டுமனைப் பட்டா கேட்டு, 102 மனுக்களும், வேலைவாய்ப்புக்கு, 8 மனுக்களும், 137 இதர மனுக்கள் என மொத்தம், 300 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.மாவட்ட வருவாய் அலுவலர்; சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் சார்பில் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்களான ஒரு பயனாளிக்கு 1,500 ரூபாய் மதிப்பில் மூக்கு கண்ணாடிக்கான உதவித்தொகையும், 10 பயனாளிகளுக்கு 13,000 ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், ஈமச்சடங்கு உதவிதொகையாக இரண்டு நபருக்கு தலா 25,000 ரூபாய் உதவித்தொகை என மொத்தம், 13 பயனாளிகளுக்கு 65,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா வழங்கினார்.இக்கூட்டத்தில் தமிழக அரசின் நாட்டுப்புற நல வாரிய நிர்வாக குழு உறுப்பினர் கலாராணி, கலெக்டரின் நேர்முகஉதவியாளர் கோகிலா, துணை கலெக்டர் (பயிற்சி) மதுஅபிநயா, தனித்துணை தாசில்தார் சுரேஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
20-Aug-2024