உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைனில் போதை மாத்திரை ஹரியானா நபர் கைது 

ஆன்லைனில் போதை மாத்திரை ஹரியானா நபர் கைது 

கோவை: கோவை மாநகர பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் குட்கா புழக்கம் அதிகரித்துள்ளது. போதை மாத்திரை பயன்படுத்தி, கைதான நபர்களிடம் விசாரித்ததில், பலர் ஆன்லைன் வாயிலாக ஹரியானாவில் இருந்து வாங்கியதாக தெரிவித்தனர். போலீசார் விசாரித்தபோது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் கர்க், 41, 'துலீப் பார்மா' என்ற பெயரில் மாத்திரைகள் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது. போலீசார், ஹரியானா சென்று, சச்சின் கர்க்கை கைது செய்தனர். அவரிடம், 19,500 மாத்திரைகளை பறிமுதல் செய்து, அவரை கோவை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை