உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரஷர் மண் லோடு லாரிகள் தார்பாலின் மூடாமல் இயக்கம்

கிரஷர் மண் லோடு லாரிகள் தார்பாலின் மூடாமல் இயக்கம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், அதிகப்படியான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல பகுதிகளில், கிரஷர் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து, தினமும் அதிகப்படியான டிப்பர் லாரிகளில் கிரஷர் மண் ஏற்றப்பட்டு, கட்டுமான பணிக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.குறிப்பாக, கிரஷர் மண் ஏற்றிச் செல்லப்படும் லாரிகள், டிராக்டர்கள் நகரின் முக்கிய வழித்தடங்கள் வழியாகவே இயக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான வாகனங்களில், தார்பாலின் கொண்டு மூடப்படுவதில்லை. இதனால், காற்றில் பறக்கும் மண்துகள்கள், பின்னால் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுநர்களை திணறடிக்கச் செய்கிறது. பாதசாரிகளும் பாதிக்கின்றனர்.மக்கள் கூறியதாவது: பெரும்பாலான டிப்பர் லாரிகளில் தார்பாலின் போர்த்தி கட்டி செல்வது கிடையாது. காற்றில் பறக்கும் மண்துகளில் இருந்து பாதுகாக்க ஹல்மெட் அணிந்தாலும், பின்னால் அமரும் பெண்கள், குழந்தைகள் பாதிக்கின்றனர். துறை ரீதியான அதிகாரிகள், நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், அதிக கிரஷர் மண் ஏற்றிச் செல்லும் லாரிகளைக் கண்டறிந்து தடுக்க வேண்டும். தார்ப்பாலின் போர்த்தி மூடி எடுத்துச் செல்ல அறிவுறுத்துவதுடன், விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை