உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்சலுக்கு அதிக கட்டணம் இழப்பீடு வழங்க உத்தரவு 

பார்சலுக்கு அதிக கட்டணம் இழப்பீடு வழங்க உத்தரவு 

கோவை : பார்சலுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ததால், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த நித்யானந்தன், தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வாங்குதற்காக, கடந்த 2023, நவ., 5ல், சிவகாசி சென்றார். வாங்கிய பட்டாசு பார்சலை, கோவைக்கு அனுப்ப, ஏ1 பார்சல் ஸ்பீடு சர்வீசில் புக் செய்தார். 500 ரூபாய் கட்டணம் செலுத்தினார். கோவைக்கு பார்சல் வந்தவுடன், குடோனில் வாங்க சென்ற போது, கூடுதலாக, 22 ரூபாய் கேட்டனர். பணத்தை கொடுத்த அவர், கூடுதல் தொகை குறித்து கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''பார்சல் சர்வீஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், கூடுதலாக பெற்ற தொகை, 22 ரூபாய் திருப்பி செலுத்த வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி