உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 24 மணிநேர குடிநீர் திட்ட பணி விரைந்து முடிக்க உத்தரவு

24 மணிநேர குடிநீர் திட்ட பணி விரைந்து முடிக்க உத்தரவு

கோவை;மாநகராட்சி பகுதிகளில் நடந்துவரும், 24 மணிநேர குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 24 மணிநேர குடிநீர் திட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். ஒண்டிப்புதுார், திருச்சி ரோடு மற்றும், 52வது வார்டு மசக்காளிபாளையம் ரோடு, பாலன் நகர் ஆகிய இடங்களில் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், சிங்காநல்லுார், நேதாஜிபுரம், எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி பகுதிகளில் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை தாமதமின்றி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார். மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி கமிஷனர் கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை