உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘ஓடிபி’ வரவில்லை டிஜிட்டல்மய வேலைகளில் தொய்வு

‘ஓடிபி’ வரவில்லை டிஜிட்டல்மய வேலைகளில் தொய்வு

கோவை: கால்நடை பராமரிப்பு துறையை ‘டிஜிட்டல்’ மயமாக்கும் வேலைகள் நடக்கின்றன. அதன்படி, தேசிய ‘டிஜிட்டல்’ கால்நடை திட்டத்தில் கால்நடை உரிமையாளர்களின் விபரங்கள், ஜூன் முதல் பதிவு செய்யப்படுகிறது. கால்நடைகளின் 12 இலக்க காது குறி எண், செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், மின்னணு தகவல் வாயிலாக மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கால்நடை உரிமையாளர்களின் மொபைல் போன் எண், ஆதார் எண் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பெறப்படும் ஓ.டி.பி., வாயிலாக பதிவுகள் நடக்கின்றன. இதனால் கால்நடை கொள்முதல், விற்பனை ஆகிய சமயங்களில் முழு விபரங்களை கால்நடை வளர்ப்போர் அறிந்து கொள்ளலாம். மாவட்டத்தில் 110 மருந்தகங்கள் உள்ளன. கால்நடை உரிமையாளர்கள் அந்தந்த எல்லைக்குட்பட்ட மருந்தகங்களில் ஆதார் எண், மொபைல் எண், வார்டு எண் விபரங்களை கட்டாயம் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் ஒத்துழைக்க வேண்டும் கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் 1.06 லட்சம் கால்நடை உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆதார் எண், மொபைல் எண் என இரு பிரிவுகளாக சரிபார்ப்பு பணி நடக்கிறது. ஆதார் எண் மூலம் இதுவரை 53,704 பேருக்கு(51 சதவீதம்) சரிபார்ப்பு முடிந்துள்ளது. மொபைல் எண் மூலம் 31,739 பேர்(30 சதவீதம்) சரிபார்த்துள்ளனர்; 74,584 பேருக்கு(70 சதவீதம்) நடக்க வேண்டியுள்ளது. பழைய மொபைல் எண் இல்லாதது, ‘இன்கமிங்’ வசதி இல்லாததால், ஓ.டி.பி., பெறமுடியாதது ஆகிய காரணங்களால் தொய்வு ஏற்பட்டுள்ளது. செப்.,க்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கோமாரி நோய் தடுப்பூசி பணிகளும் நடக்கின்றன. கால்நடை வளர்ப்போர் ஒத்துழைத்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ