உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்கத்தின் மாவட்ட தலைவர் நாட்ராயன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயப்பிரகாசம் முன்னிலை வகித்தார். தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் கட்டண சலுகையை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும் உட்பட பல்வேறு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை