உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நியூஸ்கீம் ரோட்டில் பள்ளங்கள்; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

நியூஸ்கீம் ரோட்டில் பள்ளங்கள்; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம், 147.78 கி.மீ., துாரத்துக்கு ரோடுகள் உள்ளன. அதில், நகராட்சி எல்லைக்குள், 11.50 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையினராலும், 5 கி.மீ., நீளமுள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் வாயிலாகவும் பராமரிக்கப்படுகிறது.அவற்றில் நகராட்சியில் பராமரிக்கப்படும் ரோடுகள் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, நியூஸ்கீம் ரோட்டில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.ஏற்கனவே, இந்த ரோட்டில், இருபுறமும், விதிமீறி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், போக்குவரத்தும் தடைபடுகிறது.மக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி நகரில், நியூ ஸ்கீம் ரோடு, ராஜாமில்ரோடு உள்ளிட்ட பல ரோடுகள், போக்குவரத்துக்கு தடையாக, குண்டும் குழியுமாக உள்ளது. நியூஸ்கீம் ரோட்டில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே அந்த ரோடு மிகவும் மோசமாக உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் பள்ளங்களால் விபத்து ஏற்படுகிறது. இதேபோல, ரோட்டை மறித்து இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.சிறப்பு சாலை திட்டத்தின் கீழ், ரோடுகளை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நியூஸ்கீம் ரோட்டிலுள்ள கான்கிரீட் ரோட்டை அகற்றி, தரமான தார் ரோடு அமைக்க வேண்டும். மேலும், வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய இடம் ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ