உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாக்கடை கட்டி கொடுங்க  மனு கொடுத்து வலியுறுத்தல் 

சாக்கடை கட்டி கொடுங்க  மனு கொடுத்து வலியுறுத்தல் 

பொள்ளாச்சி,: பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில், சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரிடம், பா.ஜ., தெற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் கவுதம் லிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி, சிஞ்சுவாடி ஊராட்சிக்கு உட்பட்ட தேவநல்லுாரில், ஆதிதிராவிடர், 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். வீடுகளில் இருந்து கழிவுநீர் முறையாக வெளியேற வசதி இல்லாமல், ஊருக்கு அருகே புளியமரத்தடியில் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடுகள் உள்ளது.இதன் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் படிக்கின்றனர். மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாய் கட்டி, கழிவுநீர் முறையாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ