உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ்; சென்டம் அதிகரிக்கும்! தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ்; சென்டம் அதிகரிக்கும்! தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

- நிருபர் குழு -பிளஸ் 2 மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட பொதுத்தேர்வு நேற்று நடந்த நிலையில், வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 38 மையங்களில் நடத்தப்படுகிறது. அவ்வகையில், நேற்று, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு நடந்தது.தேர்வு குறித்து கந்தசாமிமெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்துவருமாறு:செல்வகவுசிகா: கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்திற்கும் சரியாக விடை எழுதியுள்ளேன். ஏற்கனவே, பள்ளி அளவில் நடத்தப்பட்டிருந்த அலகு தேர்வு வாயிலாக, நன்கு பயிற்சி பெற்றிருந்ததால் தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. இந்த தேர்வில் முழு அளவில் மதிப்பெண்கள் கிடைக்கும்.வசந்தகுமார்: கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண்ணில் இடம்பெற்றிருந்த அக வினாக்கள் மூன்றும் எளிமையாக இருந்தது. இரண்டு மதிப்பெண் கட்டாய வினாக்களும் எளிமையாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்களில் இரண்டு அக வினாக்களாக இருந்தது. நுாறு மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.* சந்தியா, சித்பவானந்தா பள்ளி, செங்குட்டைபாளையம்: கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு எளிமையாக இருந்தது. கட்டாய வினாவில் ஒன்று மட்டும் கடினமாக இருந்தது. இருந்தாலும் எழுதி இருக்கிறேன். மற்ற அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. படித்த வினாக்களாக இருந்ததால், குறித்த நேரத்துக்கு முன்பே தேர்வு எழுதி முடித்து விட்டேன். நிச்சயம் நல்ல மதிப்பெண் கிடக்கும்.* வால்பாறை துாய இருதய பள்ளி மாணவிகள் கருத்து:பாவனாஸ்ரீ: கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வை பொறுத்த வரை, எதிர்பார்த்த வினாக்கள் கேட்கப்படவில்லை. 2, 5 மதிப்பெண்களுக்கான வினாக்கள் சில கடினமாக இருந்தன. பெரும்பாலான வினாக்கள் படித்த பாடத்தில் இருந்து கேட்கப்பட்டதால், தெளிவாக பதிலளித்துள்ளேன். அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.லத்திகா: கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வில் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. 1 மற்றும் 2 மதிப்பெண் வினாக்கள் சில கடினமாக இருந்தாலும், பிற வினாக்கள் எளிதாக இருந்ததால் தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். படித்த பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை அச்சமின்றி விரைவாகவும், தெளிவாகவும் எழுதினேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.* உடுமலையில் 18 மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வு குறித்து, காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து வருமாறு:சிவவிஷால்: கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. அதிகமான பயிற்சி செய்த வினாக்கள் வந்திருந்தன. எதிர்பார்த்ததை விடவும் சுலபமாக விடைகளை எழுத முடிந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் மட்டும், இரண்டு வினாக்கள் குழப்பும் வகையில் இருந்தன.ேஷாபிகா: நேற்று நடந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில், ஐந்து மதிப்பெண் பகுதியில் மட்டும் ஒரு வினா புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது. மற்ற வினாக்கள் அடிக்கடி பயிற்சி பெற்றவை. இதனால் மகிழ்ச்சியுடன் விடைகளை எழுதினோம். தேர்வு எளிமையாக இருந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும்.லாவண்யா: கம்ப்யூட்டர் பயன்பாடு தேர்வு எதிர்பார்த்தவாறு மிகவும் எளிமையாக இருந்தது. பள்ளியில் முக்கியமாக பயிற்சி அளித்த, பெரும்பான்மையான வினாக்கள் கேட்கப்பட்டது. இதனால், பதட்டமில்லாமல் தேர்வு எழுத முடிந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் ஒரு வினா குழப்பும் வகையில் இருந்தது. மற்ற பகுதிகள் எல்லாம் சுலபமாகவே இருந்தன.பூபதி: கம்ப்யூட்டர் பயன்பாடு தேர்வு கடினமாக இருக்குமோ என அச்சத்தில் இருந்தோம். ஆனால் சுலபமாக இருந்தது. ஒரு மதிப்பெண், இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் பகுதிகளில் அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்கள் வந்திருந்தன. சதம் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை