உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்சோ சட்ட பிரிவு வீடியோ பள்ளிகளில் ஒளிபரப்ப உத்தரவு

போக்சோ சட்ட பிரிவு வீடியோ பள்ளிகளில் ஒளிபரப்ப உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போக்சோ சட்டப்பிரிவுகள் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை, பள்ளிகளில் ஒளிபரப்பு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்க, போக்சோ உள்ளிட்ட சிறப்பு சட்டங்கள் அமலில் உள்ளன. இவை குறித்த விழிப்புணர்வு இல்லாததால், பல குற்றங்கள் புகார்களாக பதிவு செய்யப்படுவதில்லை. இந்நிலையில், போக்சோ சட்டப்பிரிவுகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், விழிப்புணர்வு வீடியோக்களை தயாரித்து, யு டியூபில் வெளியிட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் கீழ், குற்றங்களாக கருதப்படும் செயல்பாடுகள் குறித்தும், புகார் அளிக்க வேண்டிய முறைகள், அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்தும், அனிமேஷன் அடிப்படையில் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை, அனைத்து பள்ளிகளிலும், மன்ற செயல்பாட்டுக்கான நேரத்தில், மாணவ - மாணவியருக்கு காண்பிக்க, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 16 வீடியோக்களின் 'லிங்க்' பள்ளிக்கு அனுப்பப்பட்டு, அவற்றை ஆக., 10க்குள், மாணவர்களுக்கு ஒளிபரப்பவும், அதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை