உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி - கோவை ரயில் திடீர் ரத்து; பயணியர் அவதி

பொள்ளாச்சி - கோவை ரயில் திடீர் ரத்து; பயணியர் அவதி

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து, தினமும் காலை, 7:25 மணிக்கு கோவைக்கு பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. கிணத்துக்கடவு, போத்தனுார் வழியாக காலை, 8:38 மணிக்கு கோவையை சென்றடைகிறது.வாரத்தில் ஏழு நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில், பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் ரயிலில் பயணிக்க, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் ரயிலில் பயணிக்க, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் காத்திருந்தனர். ஆனால், ரயில் இயக்கப்படும் நேரத்துக்கு வராததால், கோவைக்கு பணி நிமித்தமாக செல்லும் பயணியர் அவதிப்பட்டனர். ரயில் வராததை அறிந்த பயணியர், பஸ்சில் சென்றனர்.இது குறித்து பயணியர், ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் மின்சார ரயில், சரியான மின்வினியோகம் இல்லாததால், இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போத்தனுாரிலேயே அந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது,' என்றனர். தொடர்ந்து மாலையில் ரயில் வழக்கம் போல இயக்கப்பட்டதாக ரயில் பயணியர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ