மேலும் செய்திகள்
முகூர்த்த நாள் இல்லை குறைந்தது பூ விலை
04-Sep-2024
கோவை : ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை பூமார்க்கெட்டில் உதிரிப்பூக்கள் விலை உயர்ந்தது. கோவை பூமார்க்கெட்டுக்கு, ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, உதிரிப்பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை பூமார்க்கெட்டில் உதிரி பூக்கள் ஏராளமாக விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. அதன் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று மல்லி, 1200 ரூபாய்க்கும் முல்லை, ஜாதி மல்லி கிலோ, 600 ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், அரளி, 160 ரூபாய்க்கும், ரோஜா கிலோ, 340 பன்னீர் ரோஜா, 300 ரூபாய்க்கும் விற்பனையானது. பூவியாபாரிகள் கூறுகையில், 'இந்த ஓணம் பண்டிகையை பொருத்தவரை, உள்ளூர் வியாபாரம் பரவாயில்லை. வயநாடு சம்பவத்தால், கேரளாவில் பல இடங்களில் ஓணம் கொண்டாடவில்லை. அதனால் பூ விற்பனை பாதியாக குறைந்துள்ளது. வழக்கமாக ஓணத்துக்கு இங்கிருந்து கேரளாவுக்கு தினமும், 10 டன் பூக்கள் வரை போகும். இப்போது 5 டன்னுக்கு குறைவாகவே சென்றுள்ளது' என்றனர்.
04-Sep-2024