பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின், 74வது பிறந்த நாள் விழா, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே கொண்டாடப்பட்டது. பா.ஜ., நகர தலைவர் பரமகுரு தலைமை வகித்தார். நகர, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.நாயக்கன்பாளையம் ஊராட்சியில் பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு, உறுப்பினர் சேர்க்கை, மகளிருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ., மாவட்ட துணை தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வசந்தராஜன், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். அதில், 200க்கும் மேற்பட்ட மகளிர், 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.* வால்பாறை பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா மண்டல் தலைவர் பாலாஜி தலைமையில் நடந்தது. சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் பெயரில் சிறப்பு பூஜை செய்தனர். அதன்பின், பா.ஜ., மண்டல் பார்வையாளர் தங்கவேல், கொடியேற்றி இனிப்பு வழங்கினார். கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் பா.ஜ., மண்டல் பொதுசெயலாளர் செந்தில்முருகன், மகளிர்அணி மாவட்ட செயலாளர் கனகவல்லி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் வினு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.* உடுமலை அரசு மருத்துவமனை மற்றும் நகர பா.ஜ., சார்பில் நடந்த முகாமில், நகரத்தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி, மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர். பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ஏரிப்பாளையம் தங்காத்தமன் கோவிலில், சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம், நகர வார்டுகளில் நடந்தது. - நிருபர் குழு -