21ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
கோவை: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி, கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில்நடக்கிறது.கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, கோவை பொள்ளாச்சி பிரதான சாலை ஈச்சனாரியில் அமைந்துள்ள ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உற்பத்தி, ஜவுளித் துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உட்பட, 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் candidate loginல் விபரங்களை பதிவு செய்தல் வேண்டும் மற்றும் https://forms.gle/d9Q8jXKptitP3hzy6 என்ற லிங்கிலும் விபரங்களை பதிவு செய்வது அவசியம்.விபரங்களுக்கு, மனுதாரர்கள், 0422 - 2642388, 94990 55937 என்ற எண்ணிலும், வேலை அளிப்போர், 97901 99681 என்ற எண்ணிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.