உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்துணவு சமையலருக்கு நிவாரணத்தொகை வழங்கல்

சத்துணவு சமையலருக்கு நிவாரணத்தொகை வழங்கல்

வால்பாறை, ; வால்பாறையில், பள்ளி சத்துணவு சமையலரின் குடும்பத்துக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.வால்பாறை அடுத்துள்ள கல்யாணப்பந்தல் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி லதா,51. இவர், லோயர் ேஷக்கல்முடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வந்தார். இவர் கடன் தொல்லையால் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில், தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியத்தின் முயற்சியால், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், இறந்தவரின் ஈமச்சடங்கிற்காக, 25 ஆயிரம் ரூபாய் வால்பாறை நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.மீதமுள்ள நிவாரணத்தொகையை முறைப்படி ஆவணங்களை நகராட்சி அலுவலகத்தில் வழங்கியபின் வழங்கப்படும். இத்தகவலை, சத்துணவு பணியாளர் ஒன்றியத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ