உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருமண மண்டப நிர்வாகிக்கு பிடிவாரன்ட்

திருமண மண்டப நிர்வாகிக்கு பிடிவாரன்ட்

கோவை;இழப்பீடு வழங்க தவறியதால், திருமண மண்டப நிர்வாகிக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. கோவை, ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவர், தனது மகள் திருமண நிகழ்ச்சிக்கு, சூலுார், குமரன் கோட்டம், ஆர்.வி.எஸ்., மண்டபத்தை முன்பதிவு செய்து, 70,000 ரூபாய் செலுத்தினார். கொரானா தொற்று முழு அடைப்பு காரணமாக, 2020, மே, 26 மற்றும் 27 ம் தேதி நடக்க இருந்த திருமண நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால், மண்டப நிர்வாகத்தினர், ஏற்கனவே செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்க மறுத்தனர். இதனால், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சேலம் நுகர்வோர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. விசாரித்த ஆணையம், முன் பதிவு தொகை, 70,000 ரூபாய் திருப்பி கொடுப்பதோடு, 90,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் , 2023, ஏப்ரலில் உத்தரவிட்டது. ஆனால், மண்டப நிர்வாகம் இழப்பீடு வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, திருமண மண்டப நிர்வாகிக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, சேலம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.......


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ