மேலும் செய்திகள்
ஆதித்யா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்
13-Aug-2024
மேட்டுப்பாளையம் ; சிறுமுகையில், நாட்டியம் கற்றுக் கொள்ளும், மாணவிகளுக்கு சலங்கை பூஜை விழா நடந்தது.சிறுமுகையில் கிருஷ்ணா நாட்டியாலயா பள்ளி உள்ளது. இப்பள்ளியில் புதிதாக நாட்டியம் கற்கும் மாணவிகளுக்கு சலங்கை அணிவிப்பு பூஜை நடந்தது. விழாவுக்கு நாட்டியாலயா பள்ளி குரு பிருந்தாகுமாரி தலைமை வகித்தார். மாணவி சுவாதிகா வரவேற்றார். விழாவில், முதலில் நடராஜருக்கு அபிஷேக, ஆராதனை பூஜை நடந்தது. பின்பு ஒவ்வொரு மாணவிகளின் பாதங்களிலும், சலங்கை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடனம் ஆடினர். விழாவில், இசை ஆசிரியர்கள் ஹேமா கண்ணன், மதுவந்தி, சரத்பாபு, அருணா உட்பட பலர் பங்கேற்றனர்.
13-Aug-2024