மேலும் செய்திகள்
தபால் நிலையங்களில் புனித கங்கை நீர் விற்பனை
03-Aug-2024
கோவை;சுதந்திர தினத்தில், மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடிகளை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில், தபால் நிலையங்களில், ரூ.25 என விலை நிர்ணயிக்கப்பட்டு, தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தில், கோவை அஞ்சலக கோட்டம் சார்பில், 4,000ம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.கோவை கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் கூறுகையில், ''கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் கூட்ஷெட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையங்கள், 80 துணை தபால் நிலையங்கள், 97 கிளை தபால் நிலையங்களில், ஆக., 10ம் தேதி முதல், தேசியக் கொடி விற்பனை துவங்கியது. 14ம் தேதிக்குள், 4,000 தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டன,'' என்றார்.
03-Aug-2024