உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிவாசல்களுக்கு மின் கட்டண டேரிப் மாற்றியமைக்க கோரிக்கை

பள்ளிவாசல்களுக்கு மின் கட்டண டேரிப் மாற்றியமைக்க கோரிக்கை

கோவை; 'அனைத்து பள்ளிவாசல்களுக்கும் மின் கட்டண டேரிப்-2சி என கணக்கிட வேண்டும்' என, கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த கூட்டமைப்பு சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்த மனு விபரம்:வக்பு வாரியத்தின் கீழ் இல்லாத பள்ளிவாசல் கட்டடத்துக்கான மின் கட்டணம் டேரிப்-5 என்கிற கட்டணத்தில் கணக்கிடப்படுகிறது. அனைத்து பள்ளிவாசல்களுக்கும் டேரிப்-2சி விகிதத்தில் கணக்கிட வேண்டும்.கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 87வது வார்டில் தார் சாலை, மழை நீர் வடிகால், கழிவு நீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும். கரும்புக்கடை பகுதியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியை சேர்ந்த மாணவியர் கல்வி கற்க வெகுதுாரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இதை தவிர்க்க, கரும்புக்கடை புல்லுக்காடு பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த வேண்டும்.சிறுபான்மை மக்களுக்கு தமிழக அரசால் வழங்கும் கல்வி உதவித்தொகையை உயர்த்துவதோடு, சரியான முறையில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பொது நலன் கருதி, ஜமாஅத்துகள் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி உருவாக்கினால், அரசு உதவி பெறும் பள்ளியாக அங்கீகரித்து, அதற்கான உதவிகள் வழங்க வேண்டும்.அனைத்து அரசு துறைகளிலும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு சரியாக அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு ஏற்படுத்த வேண்டும். மேலும், முஸ்லிம்களுக்கென தனி தொகுதி ஒதுக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பின்போது, முஸ்லிம்களின் மக்கள் தொகை அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை