மேலும் செய்திகள்
கழுத்தில் சால்வை சிக்கி பள்ளி மாணவன் பலி
07-Aug-2024
தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
30-Jul-2024
பாலக்காடு : பாலக்காடு அருகே, ஸ்கூட்டர் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில், ஓய்வு பெற்ற எஸ்.ஐ., பலியானார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா மந்தக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர், 68. ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,யான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து பாலக்காடு நகரை நோக்கி ஸ்கூட்டரில் சென்றார். அப்போது, கோவை -- -கோழிக்கோடு பைபாஸ் ரோட்டில், பாலால் சந்திப்பில், ஸ்கூட்டர் மீது டேங்கர் லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பாலக்காடு டவுன் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
07-Aug-2024
30-Jul-2024