யோகாவில் அசத்திய பள்ளி மாணவர்கள்
பொள்ளாச்சி,; பள்ளி மாணவர்களுக்கு இடையிலான, மாநில யோகாசன போட்டி, பழநியில் உள்ள அங்காள பரமேஸ்வரி மண்டபத்தில் நடந்தது. போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.அதில், ஆனைமலை, கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். அத்லெட்டிக் பிரிவில், ஆசனம் செய்து, முதல் பரிசை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் பரிசு வழங்கினார்.தொடர்ந்து, பள்ளித் தாளாளர் சண்முகம், செயலாளர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், யோகா பயிற்சியாளர் துரைசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.