மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு
01-Sep-2024
73 அணிகள் பங்கேற்பு | sports | Udumalpet
14-Aug-2024
பெ.நா.பாளையம்;தடாகம் ரோடு, இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அரசு சார்ந்த திட்டங்களை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும், பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படுகின்றன. கோவை தடாகம் ரோடு, இடையர்பாளையம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த தேர்தலில், மாநகராட்சி கவுன்சிலர்கள் சம்பத், தமிழ்ச்செல்வன், முன்னாள் மாணவர் மருதாசலம், தலைமை ஆசிரியர் அனந்தலட்சுமி ஆகியோர் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும், 14 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தேர்தலில் பங்கேற்றனர். முடிவில், தலைவராக ராஜராஜேஸ்வரி, துணைத்தலைவராக சோனியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், 10 பெண்கள், 4 ஆண்கள் என, 14 உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பு வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
01-Sep-2024
14-Aug-2024