உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வர் முடக்கம்; இ-பாஸ் சோதனை செய்வதில் சிக்கல் :நீண்ட துாரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

சர்வர் முடக்கம்; இ-பாஸ் சோதனை செய்வதில் சிக்கல் :நீண்ட துாரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

மேட்டுப்பாளையம்;சர்வர் முடங்கியதால் இ-பாஸ் சோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சோதனை சாவடியில் நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.நீலகிரி மாவட்டத்தில் மே 7ம் தேதி முதல் இ- பாஸ் முறை அமலுக்கு வந்துள்ளது. வரும் 30-ம் தேதி வரை இம்முறை அமலில் இருக்கும். இதையடுத்து நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ-பாஸ் சோதனை நடந்து வருகிறது. கோவையில் இருந்து நீலகிரி செல்லக்கூடிய சாலையில் மேட்டுப்பாளையம் கல்லார் தூரிப்பாலம் அருகே இ- பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வார இறுதி நாளான நேற்று ஊட்டிக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அவர்கள் இ- பாஸ் பெற்றுள்ளனரா என கல்லார் சோதனை சாவடியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இ- பாஸ் இல்லாதவர்களுக்கு அதிகாரிகள் இ- பாஸ் விண்ணப்பித்து எடுத்து தந்தனர். அப்போது இ- பாஸ் சர்வர் முடங்கியது. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட துாரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் கல்லார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாரிகளால் புதிதாக இ- பாஸ் எடுத்து தர முடியாமலும், இ- பாஸ் பதிவை செக் செய்ய முடியாமலும் திணறினர்.இதுகுறித்து அங்கு பணிபுரியும் வருவாய் துறையினர் கூறுகையில், வார இறுதி நாள் என்பதால் ஊட்டி செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. அதிகபடியான வாகனங்களுக்கு ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்வதால் சர்வர் முடங்கியது.நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை. இதனால் அவ்வாகனங்கள், அரசு பஸ்கள் போன்றவற்றில் சோதனை செய்வது கிடையாது, என்றனர்.கல்லார் தூரி பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் ஒரே ஒரு கழிவறை தான் உள்ளது. ஆண், பெண் என இருபாலரும் இதைத் தான் உபயோகிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கழிவறை சென்று தண்ணீர் ஊற்ற முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் மற்றுமின்றி, சுற்றுலா பயணிகளும் அடிப்படை வசதி இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை