கடை பூட்டை உடைத்து திருட்டு
கோவை : ரத்தினபுரி பகுதியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடிச்சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். ரத்தினபுரி, சாஸ்திரி ரோட்டை சேர்ந்த மணிக்குமார், 45 அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள், கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைந்திருந்தது. கல்லா பெட்டியில் இருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் 50 சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. மணிக்குமாரின் மகன் ஸ்ரீஹரி ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். ரத்தினபுரி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.