உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்தி சாலையில் தொழிற்பூங்கா அமைக்க சியா கோரிக்கை

சத்தி சாலையில் தொழிற்பூங்கா அமைக்க சியா கோரிக்கை

கோவை: கோவை வடக்குப் பகுதியில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், போதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் சத்தி சாலையில், தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என, சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் அசோசியேசன் (சியா) வலியுறுத்தியுள்ளது.'சியா' அமைப்பு சார்பில், 2025-26ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டில், கோவை குறு சிறு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் குறித்து, முதல்வர் மற்றும் நிதியமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.மனுவில் மேலும் கூறியுள்ளதாவது:எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட, அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த நிதி பயனாளர்களுக்கு விரைவில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்வது, அதிக ஊழியர்களைப் பணியமர்த்துவதை ஊக்குவிக்க வரி விலக்குகள் அளிக்கப்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் குறு, சிறு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரி, தொழில் வரி குறைக்கப்பட வேண்டும்.எம்.எஸ்.எம்.இ., செயல்பாடுகளை எளிதாக்குவதற்காக, ஒழுங்குமுறை செயல்முறைகளை, மாவட்ட தொழில்மையம் வாயிலாக எளிமைப்படுத்த வேண்டும்.குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவியாக, கோவை மாநகரம் மற்றும் புறவழிச் சாலைகள், நெடுஞ்சாலைகள் ஆகியவற்றின் தரம் உயர்த்துவதற்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.சரவணம்பட்டி, கணபதிபகுதியில், எதிர்கால போக்குவரத்து பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு, கோவில்பாளையம் வரை உள்ள ஐந்து முக்கிய சந்திப்புகளில், கூடுதல் மேம்பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.சத்தி சாலையில் தொழிற்பூங்கா அமைத்தால், 3,000 நிறுவனங்கள் பயன்பெறும். கோவை வடக்குப்பகுதியில் வேலைவாய்ப்பு பெருகும்.எம்.எஸ்.எம்.இ., ஊழியர்களின் உற்பத்தித் திறன் மற்றும் போட்டித் திறனை மேம்படுத்த, அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ