உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிர்மலா மகளிர் கல்லுாரியில் சியான் 24 கண்காட்சி துவக்கம்

நிர்மலா மகளிர் கல்லுாரியில் சியான் 24 கண்காட்சி துவக்கம்

கோவை:நிர்மலா மகளிர் கல்லுாரியில் 'சியான் 24' எனும் பல்பொருள் விற்பனை கண்காட்சி, நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது.கல்லுாரியின் மேலாண்மை துறை சார்பில் நடக்கும் இக்கண்காட்சியில், வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்கள் என பல்பொருள் அடங்கிய, 37 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. மாணவியர் மற்றும் வெளிநபர்கள் ஸ்டால்கள் அமைத்து பொருட்களை விற்பனை செய்துவருகின்றனர். காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் கண்காட்சியை, கல்லுாரி செயலாளர் குழந்தைதெரா, முதல்வர் மேரிபேபிலா ஆகியோர் துவக்கிவைத்தனர். மாணவியர் மட்டுமே நடத்தும் இக்கண்காட்சி, நாளையுடன் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ