கல்லுாரியில் படிக்கும்போதே திறன்களை வளர்க்க வேண்டும்
கோவை; நவ இந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், 'கிளஸ்டர்ஸ்' எனும் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடந்தது.இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி மற்றும் செயலாளர் பிரியா ஆகியோர் தலைமை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் துணைத் தலைவர் அபய் ஜெரே பேசுகையில், ''மாணவர்கள், கல்லூரியில் பயிலும் போதே தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என அறிவுறுத்தினார்.கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், தொழில்நுட்ப வினாடி-வினா, மார்க்கெட்டிங் போன்ற போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி முதுகலை பயன்பாட்டியல் கணினித்துறை இயக்குனர் செந்தில்குமார், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.